முன்னணி இணையப் பாதுகாப்பு மூலோபாய நிபுணரான அசேல வைத்யலங்கார (Asela Waidyalankara), அதிகாரப்பூர்வ எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) தளம் போன்றே போலித் தோற்றத்தைக் கொண்ட ஒரு மோசடி இணையதளம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது ‘X’ சமூக வலைதளத்தின் ஊடாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், இந்த போலித் தளம் பயனர்களை திசைதிருப்பவும், அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது அரசாங்கத்தால் நடத்தப்படும் உத்தியோகபூர்வ தளம் அல்ல என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட அந்தப் போலி இணையதளத்தில் உங்களின் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் உள்ளிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எரிபொருள் அனுமதிப்பத்திர சேவைகளைப் பெறும்போது உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ வழிகளை மாத்திரமே நாடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்தியாவசிய பொதுச் சேவைகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இதுபோன்ற இணையவழி மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here