இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்ல, வெலிகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

வெலிகம உட்பட தென் மாகாணத்தின் பல பகுதிகளிலும், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் எல்ல மற்றும் கொழும்பு பகுதிகளிலும் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருப்பதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

எல்ல, வெலிகம, கொழும்பு உள்ளிட்ட ஐந்து பிரதேசங்களில் யூத பிரார்த்தனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை, குறித்த பிரதேசங்களில் பொலிஸாரின் பாதுகாப்பை அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அச்சுறுத்தல்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் (TID) இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தல்துவா உறுதிப்படுத்தினார்.

“ஒரு சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், மற்றையவர் கொழும்பைச் சேர்ந்தவர். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here