ஐந்து கோடி ரூபா மோசடி செய்த செவிலியர் கைது..!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 53 பேரை இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது மருத்துவமனை செவிலியர் ஒருவர் இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து சுமார் ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்தாக ரகசிய பொலிஸ் அதிகாரிகள் குழு அவரை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் வரகாபொல தொரவக பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
![]()