பதுளை, பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியத்தலாவை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அருகில் கஜமுத்துடன் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரும் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here