கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு – முக்கிய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது நடத்திய நடவடிக்கையில், இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து செயல்பட்டதாக விசாரணைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது நேபாள காவல்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்.
இலங்கைக்கு மீளக் கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
![]()