கதிர்காமம் முருகன் ஆலயத்தில் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றம் நடைபெறவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (30.06) பாதயாத்திரையினை ஆரம்பித்துள்ளனர்.
பக்தர்களுக்காக லாகுகலை உகந்தை வன பாதையின் கதவானது, உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டினை தொடர்ந்து திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
மேலும், ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் ஜூலை 22 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.
அத்துடன் இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் ஜூலை 11ஆம் திகதி மூடப்படும்.
Post Views: 2