காசா பகுதி முழுவதிலும் கடந்த செவ்வாய் கிழமை [19] இஸ்ரேல் நடார்த்திய வான்வழித்தாக்குதலில் ஒரே நாளில் சுமார் 100 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், காசாவில் நிவாரண பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவதோடு, உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் கூறும்போது, “தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகள், அடிப்படை தேவையான தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றதோடு எதிர் வரும் நாட்களில் பாதுகாப்பான தண்ணீர் இல்லாமல் பல குழந்தைகள் இறக்க நேரிடும்” என கூறியிருந்தார்.