July 14, 2025
காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி..!
Top Updates புதிய செய்திகள்

காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி..!

May 2, 2024

குளியாப்பிட்டிய – வெரலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த 22 ஆம் திகதி தனது காதலியைச் சந்திப்பதற்காக காதலியின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இளைஞர்  காணாமல் போனதற்கு பிரதான சந்தேகநபர்களான குறித்த இளைஞரின் காதலியின் 72 வயது தந்தையும் 69 வயது தாயாரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்  இந்த கடத்தல் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இந்த இளைஞர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞரை கடத்திச்செல்ல பயன்படுத்தியதாக கூறப்படும் NW PK- 0125 என்ற சில்வர் நிற மினி  வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *