இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் புத்தாண்டை முன்னிட்டு நான்காயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து சாதனை செய்துள்ளனர்.
இந்த சாதனையானது மோதரா சூரியக் கோவிலில் நேற்று (01.01.2024) காலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் குஜராத்தின் முதல் அமைச்சர் பூபேநந்திரபாய்ப் பட்டேல் பங்கேற்றிருந்தார்.
மேலும் இது தொடர்பில் குஜராத்தின் உள்துறை அமைச்சர் சங்வி கூறும்போது, ‘நாட்டிலேயே இன்று, முதல் உலக சாதனை படைத்துள்ளது பெருமிதம்’ என்று கூறியுள்ளார்.