கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் வீடொன்றினுல் கஞ்சாவை மறைத்து வைத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, நேற்று (06.11.2023)இரவு சோதனை மேற்கொண்ட பொலிஸார் 47 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேசத்தின் பேரில் 44 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொடந்தும் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் , சாட்சி பொருட்களையும், சந்தேக நபரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here