யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் வாளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைக்திடல் கிராமத்தில் பல்வேறு வாள் வாள்வெட்டு சம்பவங்கள், மக்களை அச்சுறுத்துதல் உட்பட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் பொலிஸாருக்கு டிமிக்கி விட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை(05) பிற்பகல் வேளை அவரது வீட்டில் வைத்து மருதங்கேணி பொலிஸாரால் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்றும், அவருக்கு வாளால் வெட்டியமை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் என்றும் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சந்தேக நபர் வெவ்வேறு இடங்களில் தலைமறைவாக வசித்துவந்த நிலையில் வெள்ளிக்கிழமை (5)பிற்பகல் தனது தாயர் வீட்டிற்கு வந்திறங்கி சில நிமிடங்களில் மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.