அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொரளை பொலிஸாரிடம் மலர்சாலை ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய மலர்சாலையில் பொருத்தப்பட்ட தொலைபேசியில் வெளியிலிருந்து வந்த தொலைபேசி எண் பதிவாகவில்லை எனவும், இது தொடர்பான உண்மைகளை ஆராய நீதிமன்ற உத்தரவு பெற்று தொலைபேசி ஆய்வு அறிக்கையை பெற்று அதன் மூலம் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து எந்த முகவரியில் இருந்து அழைப்பு எடுக்கப்பட்டதாக அறிந்து அந்த நபரை அடையாளம் காணவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 2