கொழும்பில் 793 பேர்  போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க  பொருத்தப்பட்ட சீசீரிவி கமராக்கள் மூலமே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடந்த வருடம்  குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 26,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும்  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here