ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களுஅக்கல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 53 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 101 லீற்றர் 250 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1,080 லீற்றர் (6 பெரல்கள்) கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.