Saturday, May 30, 2026
No menu items!
Home புதிய செய்திகள் News சபரி மலை சென்ற யாழ். ஐயப்ப பக்தர் உயிரிழப்பு

சபரி மலை சென்ற யாழ். ஐயப்ப பக்தர் உயிரிழப்பு

34
0
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த வேளை திடீரென உடல்நல குறைப்பாடு ஏற்பட்டது.   அது தொடர்பில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டது , விமானம் தரையிறங்கியதும் தயராக இருந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மோகனதாஸ் (வயது 49) என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக குரோம்பேட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை உறவினர்கள் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here