Tamil News Channel

Blog Post

Tamil News Channel > புதிய செய்திகள் > சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை; ஒருவர் கைது!

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை; ஒருவர் கைது!

சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வர்த்தகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வர்த்தகரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சந்தேகநபரிடமிருந்து 330 போதை மாத்திரைகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

அத்துடன் குறித்த நபரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *