ஹொரணை, வகவத்தை பகுதியில் கார் ஒன்று, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதிய விபத்து CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் பயணித்த இருவர் படுகாயமடைந்து ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய, மோட்டார் வாகனத்தின் சாரதியும் காயமடைந்து ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹொரணை பொலிஸார் இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here