நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வருவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பான பணிகளை ஆற்றியுள்ளார்.
பொருளாதார பரிமாற்றச் சட்டத்தை நிறைவேற்றி, அரச நிதி முகாமைத்துவ சட்டத்தினை நிறைவேற்றியதன் மூலம் நாட்டில் முறையான நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துதல், 83 புதிய சட்டங்கள் மற்றும் சட்ட வரைவுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இந்நாட்டிற்குத் தேவையான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், ஊழலை ஒழிப்பதற்காக, சர்வதேச தரத்துடன் கூடிய ஆசியாவிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஊழல் எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தல், இந்நாட்டின் 20 இலட்சம் பேருக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு அந்த வீடுகளின் உரிமையை வழங்குதல்,பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட 27 இலட்சம் மக்களுக்கு “அஸ்வெசும” நலன்புரித்திட்டத்தை ஆரம்பித்தல், பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் அவற்றில் முக்கியமானவையாகும்.
மேலும், புதிய கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், விவசாய நவீனமயமாக்கல், மற்றும் வீட்டு உரிமைகள் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டது.
மருந்துப் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வந்து மருத்துவமனை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வீழ்ச்சியடைந்திருந்த சுகாதாரத் துறையை மீண்டும் வலுப்படுத்தல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் கவனம் செலுத்தும் பல திட்டங்களை உருவாக்குதல்,காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தாடலை சர்வதேச அளவில் கொண்டு செல்வது உட்பட அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்காக வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் செயற்படுத்தாத மாபெரும் பணிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி, கடந்த இரண்டு வருடங்களில் நிறைவேற்றியுள்ளது.