சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

36 இலட்சம் ரூபா பெறுமதியான 24,000 போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை வடக்கு மற்றும் ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முதலாம் சந்தேகநபர் 100 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீண்ட நேரம் விசாரணை செய்ததில் , எஞ்சிய போதை மாத்திரைகள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், 10 போதை மாத்திரைகள் அடங்கிய பொதி 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here