Thursday, April 23, 2026
No menu items!

சிறுவர்

ஆறு வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் கைப்பேசிகளை தவிர்க்க வேண்டும் –  சரோஜா சாவித்திரி போல்ராஜ்!

“ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது”  என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள்  உலகை வெல்ல வாய்ப்பளியுங்கள்” என்ற தொனிப்பொருளில்  விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற விழாவில்   கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்: அமைச்சர் வசந்த சமரசிங்க!

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (ஜூலை 03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுட்டிக்காட்டிய ஆளுநர்!

வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை,...

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 1,401 துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு!

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு வகையான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 1,401 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை சிறுவர்களுக்கான கல்வித் தடை தொடர்பாக 279 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  

புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதல் – சிக்கிய மூன்று சிறுவர்கள்..!

யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் சனிக்கிழமை (2/22/2025) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. கல் வீச்சு தாக்குதலில் புகையிரதத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தும் , பயணி ஒருவர் காயமடைந்தும் இருந்தார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில்...

சிறுவர்கள் தொடர்பாக 8,746 முறைப்பாடுகள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8,746 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 580 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பானவை எனவும், 321 முறைப்பாடுகள் சிறுவர் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை எனவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் சிறுவர்களின் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக 2,746 முறைப்பாடுகளும்...

சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை..!

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை (06.12.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தெரிவித்தார். மேலும்...

 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு!

யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹன்னன் சுலைமான் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, நாட்டின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் போசாக்கின்மை, கல்வி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம்...

நானுஓயா பொலிஸ் நிலையத்தில் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறப்பு!

நானுஓயா பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (20) காலை மகளிர் மற்றும் சிறுவர் - துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் ,உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தில் தனியான அறை ஒன்று ஒதுக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.என் ஏகநாயக்க மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக...

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை!

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 இலட்சம் ரூபா பெறுமதியான 24,000 போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை வடக்கு மற்றும் ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சிறுவர்களை இலக்கு...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img