ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) பொது மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

இந்த விசேட அறிக்கையில் ‘நாட்டின் அரசியல் நடத்தை’ மற்றும் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி வெளிப்படுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே, தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு வருவதை எதிர்பார்க்கப் போவதில்லை என்று விக்கிரமசிங்க அறிவித்தார்.

எவ்வாறாயினும், அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் ‘காஸ் சிலிண்டரை’ சின்னமாகப் பயன்படுத்தி போட்டியிடவுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக இருந்தாலும் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here