Mpox வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வௌியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஆனல்ட் தெரிவித்துள்ளார்.
Mpox வைரஸ் தற்போது மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க வலய நாடுகள் முழுவதும் பரவியுள்ளது.
இவ் வைரஸ் தொற்றினால் இதுவரை 461 மரணங்கள் பதிவாகியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.