2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை தெரிவிக்கும் கடிதங்கள் கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததன் பின்னர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சியின் நிலைப்பாட்டை எதிர்க்கும் உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் பொலிட்பீரோ கடந்த சில வாரங்களாக கணிசமான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்யுமாறு SLPP செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, கட்சியின் தீர்மானங்களை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கடிதங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here