எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சூரன்.ஏ.ரவிவர்மாவின் ” திரைக்கு வராத சங்கதி” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 11 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்3.30 மணிக்கு தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் .இ. பாரதியின் தலைமையில் மங்கள விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது.

இதில் வரவேற்பு உரையினை  பிரான்ஸ் TNTR  சர்வதேச ஊடகவியலாளர் திருமதி ரவிச்சந்திரன் ரவிசக்தி, நிகழ்த்தினார்.

அறிமுக உரையினை  “ஒருவன்” செய்தித்தள முகாமையாளர் அ.நிக்ஸன் நிகழ்த்தினார். வெளியீட்டு உரையினை ஜீவநதி, கடல் ஆகிய சஞ்சிகையின் ஆசிரியர் க.பரணீதரன் நிகழ்த்தியதை தொடர்ந்து  யாழ்ப்பாண பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறை தலைவர் திருமதி பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் நிகழ்த்தவுள்ளார்.

முதல் பிரதியினை புத்தக ஏழுத்தாளர் அவர்களது சகோதரிகள் பெற்றுக்கொள்ள மூத்த ஊடகவியலாளர்களான அ.நிக்சன், இ.பாரதி, ஊடக கற்கைகள் தலைவி திருமதி பூங்குழலி ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், நண்பர்கள் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here