July 8, 2025
டெங்கினால் இருவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்
News News Line Top புதிய செய்திகள்

டெங்கினால் இருவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

Dec 4, 2023

யாழ் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில், 2,203 நோயாளர்க்ள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 110 நோயாளிகளும், ஒக்டோபர் மாதத்தில் 118 நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 82 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய இடங்க்ளில் நவம்பர் மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள்   சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளால் இனங்காணப்பட்டுள்ளனர்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செப்டம்பர் மாதத்தில் 19 நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில் 23 நோயாளர்களும் நவம்பர் மாதத்தில் 108 நோயாளர்களும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மாத்திரம் 34 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இனங்காணப்பட்ட  அதிகளவான நோயாளர்கள் கொக்குவில், கோண்டாவில், திருநெல்வேலி மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *