அம்பாறை – பெரியநீலாவணை – பாக்கியதுல் சாலியா பகுதியில் 63 வயதான தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 29 வயதுடைய ஆண் ஒருவரும் 15 வயதுடைய சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொலை சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளின் பிரேத பரிசோதனை இன்று அம்பாறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இச் சம்மபவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.