தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் வரை எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கும் தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் ஆதரவளிக்காது என மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் சமரசிங்க இவ்வாறு அறிவித்திருந்தார்.
அரச துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாத அரசாங்கத்தை விமர்சித்த சமரசிங்க, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Post Views: 2