Tamil News Channel

தலையில் சிக்கிய பாத்திரம்..!

1711387128-WhatsApp Image 2024-03-25 at 9.12.42 PM

சென்னை போரூரில் வசித்து வருபவர்கள் கார்த்திக்-ஆனந்தி இந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்திரத்தை  அகற்றிய சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

குழந்தை  வழக்கம்போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.அப்போது ஒரு பாத்திரத்தில் குழந்தை தன் தலையை விட்டதாக கூறப்படுகிறது.

எவ்வளவுவோ முயற்சித்தும் குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரைத்தை பெற்றோரால் அகற்ற முடியவில்லை.

பின்னர்  இதுதொடர்பாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை ராட்சத கத்திரி கொண்டு வெட்டியெடுத்து குழந்தையை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டனர்.

குறித்த இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts