ஜனாதிபதித் தேர்தலில் தம்மை முன்னிலைப்படுத்த எண்ணவில்லை என்றும் தேசத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தலில் நான் என்னை முன்னிலைப்படுத்தப் போவதில்லை, ஆனால் தேசத்தை மையமாக வைத்து பேசுவேன். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தேசத்தின் எதிர்காலம் பற்றியது” என்று ‘புலுவன் ஸ்ரீலங்கா’ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும் “அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு நிதியில்லாத ஒரு தேசத்தை நாங்கள் கையகப்படுத்தினோம், எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள் இருந்தன, சிலர் தங்கள் கடமைகளைச் செய்யாமல் தப்பி ஓடிவிட்டனர், அவ் வேளையில் நாங்கள் நாட்டைக் கைப்பற்றினோம், இன்று நமது வெளிநாட்டு கையிருப்பில் 84 பில்லியன் டொலர்கள் உள்ளன. இதனால் எங்கள் பணவீக்கத்தை பலப்படுத்த முடிந்தது” என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.