இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வது மற்றும் அதனை தனியார் மயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து கொழும்பில் மூன்றாவது நாளாகத் தொடர்ந்தும் இன்று (05) பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்கவுள்ளதாகவும், தற்போது நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவான ஊழியர்கள் தொடருந்துகளில் போராட்டக் களத்தை நோக்கி வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.