February 7, 2026
தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து
News News Line Sports Top புதிய செய்திகள்

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

Jan 21, 2024

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற  5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் முஹம்மட் ரிஷ்வான் 38 ஓட்டங்களையும் ஃபகர் ஷமான் 33 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக பெற்றனர்.

பந்து வீச்சில் மட் ஹென்றி, டிம் சௌதி, இஸ் சொதி மற்றும் லக்கி ஃபெர்கசன் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் 92 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணி சார்பாக க்ளன் பிலிப்ஸ் 26 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் இஃப்திகார் அஹமட் 3 விக்கட்டுக்களையும், சஹீன் அப்ரிடி மற்றும் மொஹம்மட் நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இஃப்திகார் அஹமட் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இத்தொடரின் நாயகனாக நியூசிலாந்து அணி வீரர் ஃபின் அலன் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *