2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது.
மும்பை அணி சார்பாக ஹர்த்திக் பாண்டியா (Hardik Pandya) 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் யுஸ்வேந்திர சஹல் (Yusvendra Chahal) மற்றும் ட்ரென்ட் போல்ட் (Trent Boult) ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களையும் நண்ட்ரே பர்கர் (Nandre Burger) 2 விக்கட்டுக்களையும் மற்றும் ஆவேஸ் கான் (Avesh Khan) ஒரு விக்கட்டையும் ராஜஸ்தான் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.
ராஜஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ரியான் பரக் (Riyan Parag) 54 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாகப் பெற்றார்.
மும்பை அணிக்கு ஆகாஷ் மத்வல் (Akash Madhwal) 3 விக்கட்டுக்களயும், க்வேனா மஃபாகா (Kwana Maphaka) ஒரு விக்கட்டையும் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் வீரர் ட்ரென்ட் போல்ட் (Trent Boult) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது நிலையில் உள்ளது.