தீவின் பெரும்பாலான மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தில் காலையிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here