பிரெஞ்சு வங்கி கடனை எதிர்காலத்தில் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புக்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளையடித்த சம்பவத்தின் பின்னால் இருந்த அதே ஹேக்கர்களுடன் இந்த சம்பவம் தொடர்புடையதாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன கோப்புகள், திட்டமிடப்பட்ட பிரான்சின்,பிரெஞ்சு வங்கி கடனை திருப்பிச் செலுத்துதல் தொடர்பானவை என்று ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. மற்றொரு மோசடி முயற்சிக்குத் தயாராகும் ஒரு பகுதியாக அவை அணுகப்பட்டிருக்கலாம் அல்லது அகற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குற்றவியல் புலனாய்வு பிரிவின் விசேட சைபர் தடயவியல் குழு இந்த விசாரணையை வழிநடத்துவதாக அந்த செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளது.

இதேநேரம், விசாரணையின் ஒரு பகுதியாக, அவுஸ்திரேலியாவிற்கு முன்னர் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்தும் பரிவர்த்தனையைக் கையாண்ட ஊழியர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள், கைபேசிகள் மற்றும் சிம் கார்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here