அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக காலி மேலதிக நீதவான் நீதிமன்றம் இரண்டு வியாபாரிகளுக்கு அபராதம் விதித்துள்ளது.
ஒவ்வொருவருக்கும் தலா 100,000 ரூபாய் வீதம், மொத்தமாக 200,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காலி பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது குறித்த வியாபாரிகள் கைது செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.







