ஜக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட அபிநவ முஸ்லிம் விவகார இணைப்பாளராக பசறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.ஏ.காதர், ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் (21.08) நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜக்கிய மக்கள் சக்தியின் சீர்திருத்த நடவடிக்கையின் கீழ் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் தொடர்பான கடிதம் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் வழங்கப்பட்டதுடன், கட்சியின் பாசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணார் சஞ்சய்யும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








