January 13, 2026
நிறைவேற்று அதிகாரமுறை குறித்து மகிந்த கருத்து..!
News News Line News Updates Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

நிறைவேற்று அதிகாரமுறை குறித்து மகிந்த கருத்து..!

Feb 16, 2024

நிறைவேற்று அதிகாரமுறையை நீக்குவது சரியான நடவடிக்கை என முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன்  தான் ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அனுபவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது என்ற ஊடகவியலாளர் எழுப்பிய  கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச நாட்டின் அரசியல் நிலைசிறப்பானதாக உள்ளது. முழுநாடும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதால் அதனை நீக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயல்வது எதிர்கட்சியினருக்கான பொறியாக அமையலாம், எங்களிற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க பற்றி  நன்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு எந்ததேர்தல் என்றாலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் சரியான தருணத்தில் அவர்கள் மேடைக்கு வருவார்கள் அதுவரை பொறுத்திருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேவிபி தலைவரின் இந்திய விஜயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச  இந்தியா போன்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை ஜேவிபி இறுதியாக புரிந்து கொண்டமை மகிழ்சியளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *