அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த தாக்குதலுக்கு Mary Kay Holthus எனும் 62 வயதான பெண் நீதிபதியே இலக்காகியுள்ளார்.
நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு பாய்ந்து தாக்கியுள்ளார்.
கடுமையாக ஒருவரை தாக்கிய குற்றசாட்டில் கைதி மீது வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அவருக்கு நன்னடத்தை சோதனை முறையான விடுதலையை (Probation) வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கையை நிராகரித்து, நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, அவர் நீதிபதி மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
டியோப்ரா ரெட்டன் (Deobra Redden) எனும் 30 வயதான கைதியே இவ்வாறு பாய்ந்து தாக்கிய காட்சி, நீதிமன்ற கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.