இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் யூ.பி வோரியர்ஸ் (UP Warriorz) அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணி 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய யூ.பி வோரியர்ஸ் (UP Warriorz) நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது.
யூ.பி வோரியர்ஸ் (UP Warriorz) அணி சார்பாக ஷ்வேடா செஹ்ரவட் (Shweta Sehrawat) 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் ராதா யாதவ் (Radha Yadav) 4 விக்கட்டுக்களையும் மரிஷன் கப் (Marizanne Kapp) 3 விக்கட்டுக்களையும் டெல்லி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி 14.3 ஓவர்களில் 1 விக்கட்டை மாத்திரம் இழந்து 123 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.
டெல்லி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஷஃபாலி வர்மா (Shafali Verma) 64 ஓட்டங்களையும் மெக் லென்னிங் (Meg Lanning) 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
யூ.பி வோரியர்ஸ் (UP Warriorz) அணிக்கு சோஃபி எக்லெஸ்டோன் (Shophie Ecclestone) 1 விக்கட்டை பெற்றுக் கொடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகியாக டெல்லி வீராங்கனை மரிஷன் கப் (Marizanne Kapp) தெரிவாகியிருந்தார்.
இன்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) மற்றும் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujarat Giants) ஆகிய அணிகள் மோதவுள்ளன.