கிளர்ச்சியாளர்களை இலக்கு வைப்பதற்கு பதிலாக பொதுமக்கள் ஒன்றுகூடல் மீது ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நைஜீரிய இராணுவம் நடத்திய இத்தாக்குதலில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தவர்கள் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய அவசர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி போலா அஹமது டினுபு உத்தரவிட்டுள்ளார்.
நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் கொள்ளைக்கார ஆயுதக் குழுக்களுடனும், ஜிஹாதி குழுக்களுடனும் அந்நாட்டு இராணுவம் போரிட்டு வருகிறது.