கண்டி – பேராதனை வீதியில் பல்பொருள் விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (8) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகள் மீது மோதி பின் வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது.
வேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விபத்தின் போது காயமடைந்த பாதசாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post Views: 6