Sunday, April 26, 2026
No menu items!

சாரதி

ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கிப் பயணித்த பேருந்தில் தீ விபத்து – 25 பேர் பலி!

இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, வழியிலே ஒரு உந்துருளியுடன் (lorry) மோதியதில் ஏற்பட்ட தீப்பரவலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீப்பரவலில் சிலர் கடுமையான தீக்காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

வென்னப்புவ புதிய வீதியில்  விபத்து; மகளின் கண் முன் பறிபோன தந்தையின் உயிர்!

வென்னப்புவ புதிய வீதியில் கொரககாஸ் சந்தி பகுதியில் இன்று (17) காலை 6.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னில் அமர்ந்த இளம் பெண் மற்றும் வேன் சாரதி காயமடைந்து மாரவில ஆதார...

களுதாவளையில் பாதசாரிக் கடவையில் விபத்து –  தாய், பாடசாலை மாணவி படுகாயம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை இரா.கிருஷ்ன வித்தியாலயத்திற்கு முன்னால் புதன்கிழமை(15.10.2025) இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உட்பட இருவர் படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையிலிருந்து பாடசாலை நிறைவடைந்ததும் தனது மகளை அழைத்துக் கொண்டு எதிரே அமைந்துள்ள பாதசாரிக் கடவையினால் வீதியைக் குறுக்கீடு செய்தவேளை...

விபத்துக்குள்ளான நோயாளார் காவு வண்டி; வவுனியாவில் சம்பவம்!

மன்னாரில் இருந்து வந்த நோயாளார் காவு வண்டி ஒன்று மாடு குறுக்கே வந்தமையால் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து செட்டிக்குளம் ஆண்டியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நோயாளர் காவு வண்டியில் நோயாளிகள் யாரும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கபடுகிறது. சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார். இவ் விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பரந்தன் பகுதியில் டிப்பர் மோதியதில் பெண் உயிரிழப்பு – சாரதி மீது பொதுமக்கள் தாக்குதல்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தொன்றில் இன்று 31.07.2025 பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது யாதெனில் கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி...

நுவரெலியா பயணித்த இளைஞர்கள் குழுவின் வேன் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – எட்டு பேர் காயம்!

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன் - நுவரெலியா...

கற்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்..!

மொனராகல, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்வெவ பகுதியில் இருவர் மீது கற்களால் தாக்குதல் மேற்கொண்டமையினால் ஒருவர் உயிரழிந்துள்ளார். காயமடைந்த இருவரில் ஒருவர் ஹம்பேகமுவ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலாங்கொடையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமரதுங்க ஆராச்சிகே ராஜபக்ஷ மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹேவாவலிமுனிகே...

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கெப் வாகனம் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டன் - ஸ்த்ராடன் தோட்டம் பகுதியில் நிகழ்ந்தது. விபத்தில் கெப் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்தவர்களில்...

டிப்பர் வாகனம் மீது பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு..!

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை  கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார்   இடை மறித்த போது பொலிஸாரின் சமிக்கை கட்டமைப்பை மீறி பொலிஸார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்ட போது   குறித்த டிப்பர் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி...

கிளிநொச்சியில் பொலிஸார் நவீன வேகம் கணிக்கும் இயந்திரம் மூலம் தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை!

போக்குவரத்து விதி முறைகளை மீறி அதிக வேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை நவீன வேகம் கணிக்கும் இயந்திரம் மூலம் சாரதிகளை இனங்கண்டு அவர்களுக்கெதிராக தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வேகமாக வாகனம் செலுத்திய பல சாரதிகள் தண்டப்பணம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. (கிளிநொச்சி நிருபர்- ஆனந்தன்)
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img