பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருந்த கேப்ரியல் அட்டல் (GabrielAttal) அதிபர் இமானுவேல் மேக்ரானால் நேற்றைய தினம் (09) பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் வரலாற்றில் 34 வயது இளம் பிரதமர் என்ற அந்தஸ்தை கேப்ரியல் அட்டல் பெற்றிருக்கிறார்.
எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக நேற்றைய தினம் (09) எலிசபெத் போர்ன் பதவி விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாகவே கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.