Tamil News Channel

பெண்ணொருவர் 10 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

IMG-20240713-WA0073

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் பெண்ணொருவர் 10 போத்தல் கசிப்புடன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் தலைமையிலான

குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.
அதன் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 போத்தல் கசிப்பினை பொலிஸார் மீட்டதுடன் , கசிப்பினை விற்பனை செய்வதற்காக தயார்ப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த 47 வயதான பெண்ணையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணையும் , மீட்கப்பட்ட கசிப்பினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை குறித்த பெண் ஏற்கனவே கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதாகி நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts