பாதுகாக்கப்பட்ட நக்கிள்ஸ் வனப் பகுதிக்குள் முறையான அனுமதியின்றி சனிக்கிழமை இரவு பேஸ்புக் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஐந்து பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்டபட்டுள்ளனர்.
இவ்வாறு பண்டாரவளை, கொழும்பு, பதுளை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களே ஹுன்னஸ்கிரிய வன வள அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபரொருவர் மற்றும் தனியார் துறை ஊழியர்களும் அடங்குகின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது.