பொலிஸ் மா அதிபரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இருந்து தேசபந்து தென்னகோனை இடைநிறுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் ஏற்க மறுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை நிராகரித்து தீர்ப்பை வழங்குமாறு சபாநாயகரிடம் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் பதவி வெற்றிடமாக இல்லை எனவும், இதனால் ஜனாதிபதிக்கு பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தடைபடுவதாகவும் குணவர்தன தெரிவித்துள்ளார்.







