நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன பொலிஸ் மா அதிபருக்கு இடைக்கால தடை உத்தரவு பிறபித்துள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாததென அறிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமில்லை. பதில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க எந்த ஏற்பாடும் இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபரே தொடர்ந்தும் பொலிஸ் மா அதிபராக பதவி வகிக்கின்றார் எனவும் பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.








