Tamil News Channel

Blog Post

Tamil News Channel > சினிமா > போட்டோவில் உள்ள இந்த குழந்தை யார் தெரியுமா? இளசுகளை கட்டிப்போட்ட தளபதி பட நடிகை..!

போட்டோவில் உள்ள இந்த குழந்தை யார் தெரியுமா? இளசுகளை கட்டிப்போட்ட தளபதி பட நடிகை..!

பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குழந்தை நட்சத்திரம்

கடந்த சில நாட்களாக சினிமா பிரபலங்களின் குழந்தை வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பாலிவுட்டில் வெளியான “துஜே மேரி கசம்” (Tujhe Meri Kasam) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய நடிகை தானாம் இவர். அதன் பின்னர் தமிழில் எண்ட்ரி கொடுத்து, விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

யார் இந்த நடிகை?

இந்த நிலையில், தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், இந்த நடிகைக்கு ரசிகர்களின் மனதில் எப்போதும் தனி இடம் உள்ளது. அவர் வேறு யாருமில்லை நடிகை ஜெனிலியா தான்.

ஜெனிலியாவின் கதாபாத்திரங்களை படத்தில் பார்க்கும் பொழுது ஒருவிதமான குழந்தைத்தனம் மறைந்திருக்கும். இவர் குழந்தையாக இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. தனது தாயுடன் சேட்டை செய்து கொண்டு இருக்கிறார்.

சச்சின், பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான இவர், பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *