December 13, 2025
போதையற்ற இலங்கை;ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்
News Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

போதையற்ற இலங்கை;ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்

Dec 21, 2023

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குழுக்களை  அழிக்கும்  விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம்நாள் சுற்றிவளைப்புகளில் 2296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 6 மாதங்களுக்குள் போதைப்பொருள் அற்ற  நாட்டினை உருவாக்குவேன் என பொலிஸ் மா  அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 6,583 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றுள் செவ்வாய்க்கிழமை (19) இரவு புளுமெண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின்,  ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை, சட்டவிரோத மதுபானம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய  19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதேவேளை பொதிகள் சேவையூடாக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சியம்பலாவெள பிரதேசத்தை சேர்ந்த பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கோப்பாய் பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் 14 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத  சொத்து குவிப்பு  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 மேலும் 184 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் தேடப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதன்போது 1 கிலோ 170 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ், 11 கிலோ 600 கிராம் கஞ்சா, 46 கிலோ 285 கிராம் மாவா மற்றும் 19,507 போதைப்பொருள் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *