மன்னாரில் மதுபானசாலை அமைப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் இந்த விடயத்தை எடுத்துரைத்துள்ளார்.
அதில் அரசியல் ஆதாயத்திற்காக மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது முன்னாள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதெனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ACMC தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் பிரதான வீதியில் பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மேற்படி மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் வரை மதுபானசாலைக்கு எதிராக பிரதேசவாசிகள் போராட்டம் நடத்தியதாகவும்
“இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு, இந்த மதுபானக் கூடத்திற்கான அனுமதியை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். குடியிருப்பாளர்களின் நல்வாழ்வு, குறிப்பாக இளம் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், மேலும் நீதி மற்றும் நியாயம் மேலோங்குவதை உறுதி செய்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் நம்புகிறோம், ”என்று பதியுதீன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








